சிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..!


நடிகர் சிம்பு தற்போதுதான் கோமாவில் இருந்து மீண்டு வந்தவர் போல தனது பழைய நடவடிக்கைகளை எல்லாம் ஒத்திவைத்து விட்டு நல்லபடியாக படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் தற்போது சுந்தர்.சி டைரக்சனில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் இப்போது திருந்திவிட்டாலும், இவரால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பட்ட நஷ்டம், கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடுமா என்ன..? அதனால் தனது நட்டக்கணக்கை செட்டில் செய்யும்படி மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு படியேறி நியாயம் கேட்டுள்ளார் மைக்கேல் ராயப்பன்.

இது தொடர்பாக சிம்புவை தொடர்புகொண்டால் அவர் தரப்பில் இருந்து முடியாது என்கிற பதிலே கிடைத்ததாம். அதனால் சுந்தர்.சியை தொடர்புகொண்ட தயாரிப்பாளர் சங்க தரப்பு, சிம்புவிடம் பேசி நிலைமையை புரிந்துகொண்டு மைக்கேல் ராயப்பன் விஷயத்தில் முடிவெடுக்கும்படி சுந்தர்.சியை அறிவுறுத்த சொன்னதாம்.

அப்படி சிம்பு ஒரு வாரத்திற்குள் சரியான பதில் தாராவிட்டால், சுந்தர்.சி டைரக்சனில் அவர் நடித்துவரும் ஒரே காரணத்திற்காக அந்தப்படத்தின் படப்பிடிப்பையே நிறுத்தவேண்டி வரும் எனவும் சுந்தர்.சியிடம் கூறியுள்ளார்களாம். இது என்னடா புது வம்பு என அதிர்ச்சியில் இருக்கிறாராம் சுந்தர்.சி.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *