இன்னொரு 90 எம் எல்-லா சூப்பர் டீலக்ஸ்..?


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியாகியுள்ளது சூப்பர் டீலக்ஸ் படம். காரணம் ஆரண்ய காண்டம் என்கிற படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பை சிலர் திட்டமிட்டு உருவாக்கி விட்டனர். மேலும் விஜய்சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நிலையில் தானாகவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி விட்டது.

ஆனால் படம் வெளியான பின்பு படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் முகத்தை காண சகிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.. பலரும் இந்த படத்திற்கு ஏண்டா சென்றோம் என தலையில் அடித்தபடி செல்வதையும் பார்க்க முடிந்தது. படத்தில் ஆபாசமான வசனங்கள், ஆபாசமான காட்சிகள், அருவருக்கத்தக்க செய்கைகள் என இந்த படம் பார்த்தவர்கள் இதற்கு முன் 90ml படமே தேவலாம் என கூறுகிறார்களாம்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *