வெளியானது ரஜினிகாந்தின் தர்பார் பட டிரைலர்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி பொங்கலையொட்டி திரைக்கு வர உள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் தர்பார் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மும்பையில் நடைபெற்ற தர்பார் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.

தர்பார் படத்தின் டிரைலர் யூடியூப்பில் செம வைரலாகி வருகிறது.