சூப்பர்ஸ்டார் ரஜினியின் புதிய படத்தலைப்பு ”வி”-இல் ஆரம்பிக்கிறதா?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. பேட்ட திரைப்படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ள 168வது படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜோதிகா, விவேக், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்பு அஜித்தை வைத்து சிவா இயக்கிய படங்கள் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அனைத்தும் வி செண்டிமெண்ட்டை வைத்து பெயரிடப்பட்டுள்ளது.

தற்போதும் வி செண்டிமெண்ட்டை தொடரும் சிறுத்தை சிவா, தலைவரின் 168வது படத்திற்கு ”வியூகம்” என்று தலைப்பு வைக்க பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.