சூப்பர்ஸ்டாரின் தர்பார் – மோஷன் போஸ்டர் வெளியீடு


பேட்ட திரைப்படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நீண்ட வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்திற்கான பின்னணி வேலைகள் நடந்து கொண்டுள்ளது. படத்தில் நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் கமல், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான், தெலுங்கில் மகேஷ்பாபு ஆகியோர் வெளியிட்டனர்.

அனிருத்தின் அதிரடியான இசையில் வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக “தர்பார்” திரைப்படம் திரைக்கு வருகிறது.