சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் …


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான பூஜை இன்று சன் ஸ்டுடியோசில் நடைபெற்றது. இதில் சூப்பர்ஸ்டார், குஷ்பூ, மீனா, இயக்குநர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இமான் படத்தின் இசையைக் கவனிக்கிறார். குஷ்பூ 28 வருடங்களுக்குப் பிறகும், மீனா 24 வருடங்களுக்குப் பிறகும் சூப்பர்ஸ்டாருடன் இணைகின்றனர்.

மேலும் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *