புதிய கல்வி கொள்கையை கிழித்து தொங்கவிட்ட சூர்யா


சூர்யா நடிகர் சிவக்குமார் மாணவர் அறக்கட்டளை சார்பில் நடபெற்ற விழாவில் நடிகர் சூர்யா நீட்டுக்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைக்காகவும் தனது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்திருந்தார். சூர்யா மத்திய அரசு கொண்டு வரும் கல்விக்கான புதிய வரைவுக் கொள்கை பற்றி பல கேள்விகளை முன் வைத்து இதையெல்லாம் நாம் ஏன் பேசுவதில்லை. இதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இல்லையெனில் மொத்தமாக அரசுப் பள்ளி மாண்வர்களின் எதிர்காலம் இருண்டு போகும் என பொங்கி எழுந்தார்.

தரமான அனைவருக்கும் சரி சமமாக தராமல் தகுதித்தேர்வு அனைவருக்கும் ஒரே மாதிரி என்றால் எப்படி? மூன்று வயது மாணவன் எப்படி மும்மொழிகளில் படிக்க முடியும்? புதிய வரைவுக் கொள்கையில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் நிறைய கலை அளிக்கும் அம்சங்கள் உள்ளன என விமர்சித்திருந்தார்.

சூர்யாவின் இந்தப்பேச்சு இணையமெங்கும் விவாதத்தை துவக்கியுள்ளது. அனைவரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து சூர்யா அரசுக்கெதிராக கேட்ட கேள்விகளை இணையம் வழியாக பரப்பி வருகிறார்கள். சூர்யா இப்படி பேசியது ஆளும் கட்சியை சீண்டும் செயல் அவருக்கு நிறைய பிரச்சனைகள் வரும் எனப் பலரும் சொல்லி வந்த நிலையில் பாஜக அதிமுக அரசியல்வாதிகள் சூர்யாவிர்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். சூர்யாவுக்கு எதிராக அரசியல்வாதிகள் திரண்டிருக்கிறார்கள்.

அதிமுக அமைச்சர் அளித்த பேட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கல்வி கொள்கை குறித்து நன்றாக தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு வேண்டுமானால் பதில் அளிக்கலாம். எதுவுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு புறம் பல அரசியல்வாதிகள் சூர்யாவைத் தாக்கி பேசினாலும், பொது மக்கள் இணையம் வழியே சூர்யாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். மேலும் திமுக புதிய வரைவுக் கொள்கை பற்றி ஆராய ஒரு குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *