லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ; சூர்யாவின் என்ஜிகே வேற லெவல்


சூர்யாவின் படங்களிலேயே நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் என்றால் அது செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள என்ஜிகே படம் தான். செல்வராகவன் என்கிற திறமையான இயக்குனரின் டைரக்சனில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஒரு ஆசையில் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சூர்யா.

ஆனால் எதுவுமே திட்டமிட்டபடி நடைபெறாததால் படப்பிடிப்பு தள்ளிப்போய் அதற்குப் பின்னால் துவங்கிய காப்பான் படம் கூட இப்போது முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் ஒரு வழியாக மீண்டும் என்ஜிகே படப்பிடிப்பை துவக்கி படத்தையும் வரும் மே 29-ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக கொண்டுவந்து விட்டார்கள்.

இந்தப்படம் இவ்வளவு தாமதம் ஆனாலும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமான செல்வராகவன் படம் போல இல்லாமல் கேவி.ஆனந்த், ஹரி போன்றவர்களின் பாணியில் விறுவிறுப்பான ஒரு படமாக இது இருக்கும் என்கிற ஒரு பாசிட்டிவான எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லர் ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் கேரியரில் மட்டுமல்ல செல்வராகவனின் பயணத்திலும் இந்த படம் ஒரு புதுவித மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *