ரிலீசுக்குப்பின் சுசீந்திரனை கத்திரி தூக்க வைத்த ‘மாவீரன் கிட்டு’..!


சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாவீரன் கிட்டு’. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படம் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி வெளியானது.. 1970களில் நடைமுறையில் இருந்த சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகா குரல் கொடுக்கும் பாடமாக இதை உருவாக்கி இருந்தார் சுசீந்திரன்.

இப்படத்துக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் கிடைத்தன, ஆனால் அதில் பலரும் படத்தின் இரண்டாம் பகுதி மெதுவாக செல்வதாக கருத்து தெரிவித்திருந்தனர். அதனை ஏற்று ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் சுவாரஸ்யத்தை முன்னிட்டு கதையின் இரண்டாம் பகுதியில் சில காட்சிகளை நீக்கி திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதையுடன் இன்று முதல் திரையிடப்படுகிறது..