சேனல்கள் விவகாரத்தில் தாணு தவறான முடிவெடுத்ததாக லட்சுமி ராமகிருஷ்ணன் அட்டாக்..!

நேற்று பெய்த மலையில் இன்னைக்கு முளைத்த காளான் என்று சொல்வார்களே, அந்த மாதிரி நாடோடி, நான் மகான் அல்ல போன்ற படங்களில் ஓரளவு தெரிந்த முகமாகி ‘சொல்வதெல்லாம் உண்மை’ மூலமாக பரபரப்பான நபராக மாறியவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.. இந்த கொஞ்ச காலத்தில் கிடைத்த அந்த புகழை வைத்தே இரண்டு படங்களை இயக்கியவர், இப்போது மூன்றாவது படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.

எப்போதுமே சின்னத்திரைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இவர் சாட்டிலைட் ரைட்ஸ் விவகாரத்தில் தாணுவின் முடிவை விமர்சித்துள்ளாராம். அதாவது முன்பு சாட்டிலைட் உரிமை என்பது தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதாக இருந்தது. அதுவும் தற்போது தவறான நிர்வாகத்தாலும, செயற்கையான மிகைப்படுத்துதல் காரணமாகவும் தவறாகப் போய்விட்டது என்று கூறியுள்ளாராம்.

சேனல்கள் 50 சதவீதம் சாட்டிலைட் விலை என்கிறார்கள், ஆனால், 100 சதமும், அதற்கு மேலும் சேனல்களிடம் இருந்து பெற்றால் சேனல்கள் அவற்றை எப்படி திரும்பப் பெற முடியும். பதவியில் இருப்பவர்களால் முரண்பட்டு செய்யப்பட்ட ஒரு விஷயம். அதனால் சாட்டிலைட் மார்க்கெட் என்பது இல்லாமல் போய்விட்டது. சேனல்களுடன் சண்டை போடுவதை விட அனைவரும் ஒன்றிணைந்து சேனல்களுடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளாராம். இதன் மூலம் தாணுவை அவர் அட்டாக் செய்துள்ளது நன்றாகவே தெரிகிறது.