தனுஷின் கல்யாண சென்டிமென்ட் தங்க மகனுக்கு ஒர்க் அவுட் ஆகுமா..?

தனுஷின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘தங்கமகன்’.. இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தை இயக்கியுள்ளார். வி.ஐ.பி பட சென்டிமென்ட் இதிலும் ஒர்க் அவுட் ஆகும் என்பது தனுஷின் எண்ணம்.. ஆனால் வேறொரு சென்டிமென்ட்டை அவர் கவனித்தாரா என தெரியவில்லை.

கதைப்படி, அதாவது படத்தின் ஸ்டில்களை வைத்து பார்த்து பார்க்கும்போது சமந்தாநையாண்டிவின் கழுத்தில் புத்தம்புது தாலி தொங்குகிறது. ஆக தனுஷும் சமந்தாவும் கணவன் மனைவியாக இதில் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் இதற்கு முன் தனுஷ் இப்படி திருமணமானவராக நடித்த ‘மாப்பிள்ளை’, ‘3’, ‘மயக்கம் என்ன’, ‘நையாண்டி’ ஆகிய படங்கள் எதுவும் ஓடவில்லை என்பது நமக்கு தெரியும். காரணம் ரசிகர்களை பொறுத்தவரை தனுஷ் காதலனாகத்தான் தெரியவேண்டுமே தவிர, ஒரு பெண்ணின் கணவராக அவரை பார்க்க, அந்த கதையை ஜீரணிக்க ரசிகர்கள் விரும்பவில்லை என்பதுதான் அந்தப்படங்கள் சொன்ன நீதி..

இந்தமுறை தங்கமகனாவது அந்த சென்டிமென்ட்டுக்கு தப்புமா..?