த்ரிஷாவால் ஓடிப்போனவரை திரும்ப அழைத்துவந்த அஜித்


கேரள மாநிலம் பாலக்கட்டை சொந்த ஊராக கொண்டவர் தான் பாலிவுட் நடிகை வித்யாபாலன்.. மனசெல்லாம்னு ஒரு படம் வந்துச்சே.. உங்களுக்கு தெரியுமா..? ஸ்ரீகாந்த், த்ரிஷா நடிச்ச அந்த படத்துல முதல்ல த்ரிஷாவுக்கு பதிலா ஒப்பந்தமானவங்கதான் பாலிவுட்ல கனவுக்கன்னியா வலம் வந்த வித்யாபாலன்.

ஆனா ஷூட்டிங் டைம்ல ஒரு சின்ன விபத்து ஏற்பட, செண்டிமெண்ட் காரணமா படத்துல இருந்தே வித்யாபாலனை தூக்கிட்டாங்க. இங்கே தமிழில் அவரை கண்டுக்க ஆளில்லை.. இனி தமிழ்ப்படங்களில் நடிக்கமாட்டேன் என சபதம் செய்து பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் வித்யாபாலன்.

அதிர்ஷ்ட தேவதை அவரை அங்கேயே பிடிச்சு வச்சுக்கிட, இந்தி சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்து ரசிகர்களை கிறங்கடித்தார். ஆனாலும் தன்னை புறக்கணித்த மலையாளம், தமிழ் இரண்டிலும் இருந்து வந்த வாய்ப்புகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார்.

இப்போது அதே வித்யாபாலன் தான் தற்போது மனதை கொஞ்சம் ஈரமாக்கிக்கொண்டு தற்போது சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படம் பாலிவுட் திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற படமான ‘பிங்க்’ என்கிற படத்தின் ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தில் வித்யாபாலன் அஜித்துக்கு ஊக்கம் கொடுக்கும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது .இந்த படத்தில் வித்யாபாலன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வெறும் 6 நாள்கள் மட்டுமே படமாக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.