“குருவி தலையில் பனங்காய்” ; ஸ்ருதி பயந்து விலகியதன் காரணம் இதுதான்..!


சில நாட்களுக்கு முன் ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் விலகி பரபரப்பை ஏற்படுத்தினார்.. பிரமாண்டமாக உருவாக இருக்கும் அந்த வரலாற்று படத்தில் இருந்து விலகி அதை விட பிரமாண்டமான படத்தில் வாய்ப்பு கிடைத்து போய்விட்டாரா என்ன..? அதெல்லாம் ஒன்று இல்லை.

லண்டனுக்கு பறந்து சென்று தன்னுடைய இசைக்குழுவினர் தயாரித்து வரும் இசை ஆல்பத்தின் இறதிக்கட்ட பணிகளில் ஈடுபடவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். இந்த வேலைகளுக்காகவா ‘சங்கமித்ரா’வை உதறினார் என்றால் அதுவும் இல்லை.. ‘பாகுபலி’ படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்தபின்னர் தன்னால் எல்லாம் ‘சங்கமித்ரா’ என்கிற அந்த கேரக்டரை நடிக்கமுடியுமா என்கிற பயம் ஸ்ருதிக்கு ஏற்பட்டு விட்டதாம்..

நாளை அந்தப்படத்துக்கு தனது நடிப்பால் ஏதாவது ஒரு சங்கடம் வந்து அந்த அவப்பெயரை சந்திப்பதற்கு பதிலாக இப்போதே விலகிவிடுவது நல்லது என்றே சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *