மெர்சலுக்கு வந்த சிக்கலுக்கு காரணமே வேற.. வேற…!


விஜய் படங்கள் எப்போதும் ரிலீஸ் நேரத்தில் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பது வழக்கமாகி விட்டது. இது விஜய் படங்களுக்கு மட்டுமே எப்போதும் நடக்கும் தனிப்பட்ட தாக்குதல் என்பது யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தப்படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்தது தான் காரணம்.. அதில் இடம்பெற்ற பறவைகள், விலங்குகள் காட்சிகள் எல்லாம் கிராபிக்ஸ் என்று சொல்லியும் கூட இந்த வாரியம் அதை காதுகொடுத்து கேட்க தயாரில்லை.. அதற்காக அந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்களா என்று கேட்காதீர்கள்..

அவர்கள் காரியவாதிகள்.. இந்த நேரத்தில் பெரிய தொகையை டிமாண்டாக வைத்தால் தான் மறுபேச்சு பேசாமல் கிடைக்கும் என பிளான் பண்ணி அடித்திருக்கிறார்கள் என்றே சென்சார் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.. இதோ இப்போது இது சம்பந்தமாக விஜய் தமிழக முதல்வரை சந்தித்து பேசினார். அதன்பின் காரியங்கள் படு வேகமாக நடக்கின்றனவே..

விலங்குகள் நல வாரியம் சிறப்பு ஆலோசனை கூட்டம் போட்டு ‘மெர்சல்’ படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க சம்மதித்திருக்கின்றனர். இப்போது மட்டும் பிரச்சனை எப்படி தீர்ந்தது.. துட்டு சாமி.. துட்டு.