பாலிவுட்டில் பிரகாஷ்ராஜுக்கு போடப்பட்ட மறைமுக ரெட் கார்டு..!


ஆனால் கடந்த வருடம் வெளியான ‘கோல்மால் எகைன்’ படத்திற்கு பிரகாஷ்ராஜுக்கு பாலிவுட்டில் எந்த வாய்ப்பும் தேடிவரவில்லை. இத்தனைக்கும் தமிழ் தெலுங்கில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பிரகாஷ்ராஜுக்கு என தனி மவுசு இருக்கவே செய்கிறது. நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் இந்திப்படங்களில் நடித்துவந்தார், இப்போது திடீரென ஒரு தடை விழுந்ததற்கு காரணம் என்னவாக இருக்கும்..?

அதற்கு காரணத்தையும் பிரகாஷ்ராஜே கூறியுள்ளார்.. சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் விசாரணை குறித்து மோடியையும் அவ்வப்போது பிஜேபியையும் விமர்சித்து பேசியதால் வாய்ப்பு தருவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றும் கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

அதுமட்டுமல்ல கதுவா விவாகரத்தில் அமிதாப் பச்சன் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்தது அவரது கோழைத்தனத்தையே காட்டுகிறது. மக்களுக்கு நன்கு அறிமுகமான நம்மைப்போன்றவர்கள் கோழைத்தனமாக இருக்கும்போது, இந்த சமுதாயத்தையும் கோழையாக மாற்றுகிறோம் என்பதை உணரவேண்டும்” என அமிதாப்பையும் விமர்சித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *