விஜய்சேதுபதிக்கு இப்படி நடப்பது இதுதான் முதன்முறையாம்..!


விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் கதாநாயகியாக தான்யா நடிக்க, பசுபதியும் பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்தப்படம் வரும் செப்-29அம தேதி ரிலீஸ் ஆகிறது.

என்னதான் விஜய்சேதுபதிக்கென ஒரு ஸ்டார் வேல்யூ உருவாகி இருந்தாலும் கூட அவரது படங்கள் பண்டிகை நாட்களில் இதுவரை ரிலீசானது இல்லை.. தனது படங்களும் பண்டிகை நாட்களில் ரிலீசாகாதா என்கிற ஏக்கம் நீண்ட நாட்களாகவே விஜய் சேதுபதிக்கு இருந்துவந்தது. அந்த ஏக்கத்தை தீர்க்கும் விதமாக இந்தப்படம் ஆயுதபூஜை கொண்டாட்டமாக வெளியாவதால் உற்சாகத்தில் இருக்கிறார் விஜய்சேதுபதி.