துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல்!


விஷால் நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படத்தில் விஷாலுடன் பிரசன்னா மற்றும் வினய் நடித்திருந்தனர். இத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் இயக்கி வந்த நிலையில் திடீரென்று படத்திலிருந்து இயக்குனர் மிஸ்கின் விலகினார். தற்போது இத்திரைப்படத்தை நடிகர் விஷாலே இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிடுவதாக விஷால் அறிவித்தார். அதன்படி துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.