தயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் – டி.ஆர் பேச்சு

ராட்டினம் என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு “ கல்கண்டு” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சாகருப்பு, மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், “ டாடி ஒரு டவுட் “ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கிறார்கள்.மனோரமா, கோவைசரளாவுக்குப்பின் நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார் ஜெனிபர் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.

ஒளிப்பதிவு – கே.வி.சுரேஷ்

மதன்கார்க்கி, விவேகா, யுகபாரதி,அண்ணாமலை பாடல்களுக்கு கண்ணன் இசையமைக்கிறார்

நடனம் – சுஜாதா, தினா, தினேஷ் . ஸ்டன்ட் – தளபதி தினேஷ் . எடிட்டிங் – சுரேஷ்அர்ஷ் கலை – ஜனா / தயாரிப்பு நிர்வாகம் – அசோக்குமார் . தயாரிப்பு மேற்பார்வை – எம்.எஸ்.ஆனந்த் / தயாரிப்பு – J. மகாலட்சுமி

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.M.நந்தகுமார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் திரு.எஸ்.பி.முத்துராமன் பேசியது .. நாகேஷை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் ஆசியோடுதான் இந்த விழா நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது. அவரது ஆசி இந்த அரங்கம் முழுவதும் இருக்கிறது என்று கூறினார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியது.. நாகேஷ் போன்ற திறமையான கலைஞர்கள் எப்போதும் நிலைத்து நிற்பார்கள் என்றார்.

இயக்குனர் பி.வாசு பேசியது…… நாகேஷின் கிரிடிட் கார்டும், ஆனந்த் பாபுவின் விசிடிங் கார்டும் கஜேசுக்கு இருக்கிறது அதை பயன்படுத்தி திறமையாக வளர வேண்டும் என்று கூறினார் .

டி.ராஜேந்தர் நகைச்சுவை நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்க கூடாது அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிபாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்.

சில நகைச்சுவை நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயம் தானா! நான் 1500 ரூபாய் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் இன்று கோடிக்கணக்கில் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை.அந்த காலத்தில் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒரு படத்தில் நடித்தே அந்த தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார். இன்று தயாரிப்பாளரை அழ வைத்து மக்களை சிரிக்க வைகிறார்கள் என்று பேசினார்.

மற்றும் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் செந்தில், மனோபாலா, மயில்சாமி, கஞ்சாகருப்பு,நடிகர் கஜேஷ், ஆனந்த்பாபு, படத்தின் நாயகி டிம்பிள்.இசையமைப்பாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் மதன்கார்கி, அண்ணாமலை, ரஞ்சனி, ஜெனிபர், இயக்குனர் தங்கசாமி ஆகியோரும் விழா குழுவினரை பாராட்டி பேசினர்.

இயக்குனர் நந்தகுமார், தயாரிப்பாளர் ஜவகர் ஆகியோர் நன்றி கூறினர்.