த்ரிஷா.. உண்மையில் நீங்களா இப்படி..?


இதுவும் நடிகைகள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொலாத செய்திதான்.. ஆனால் வேறு ஒரு கோணத்தில்.. நயன்தாராவைப்போல த்ரிஷாவும் தனது பட புரமொஷங்களில் கலந்துகொள்ளாமல் டிமிக்கி கொடுப்பவர் அல்ல.. ஒன்றிரண்டில் அவ்வப்போது தலைகாட்டுவார்..ஆனால் அவரை கதையின் நயாகியாக வைத்து எடுக்கப்பட்ட ‘நாயகி’ படத்தையே அவர் கண்டுகொள்ளாமல் டீலில் விட்டுவிட்டார்.

அதுமட்டுமல்ல, தனுஷுடன் முதல்முதலாக நடித்துள்ள ‘கொடி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றபோது கூட த்ரிஷா அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் சமீபத்தில் மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் விழா ஒன்றி கலந்துகொண்டார் அம்மணி இதற்காக அவர் இரண்டு நாட்கள் மதுரையில் டேரா போட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது..

இதற்காக அவர் பெருந்தொகை எதுவும் வாங்கினாரோ இல்லை, இலவசமாக கலந்துகொண்டாரோ, அனால் அவர் கலந்துகொண்டது மீனாட்சி மிஷன் மருத்துவமனை வசதியற்ற நோயாளிகளுக்கு பணம் வாங்காமல் சிகிச்சையளிப்பதி விளம்பரப்படுத்தும் நல்ல நிகழ்ச்சி ஒன்றில் தான் என்பது மனதுக்கு ஆறுதலை ஆளிக்கிறது.