போதையில் விழாவில் கலந்துகொண்டு கேரள சபாநாயகரை பதறவைத்த ஊர்வசி…!

இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை பார்த்தவர்களால், அதில் நடித்த ஊர்வசியின் கேரக்டரையும், அவரது டைமிங் காமெடியையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. அப்படி ஒரு பாந்தமான நடிப்பை அவர் கொடுத்திருந்தார். ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் அவர் மது அருந்திவிட்டு போதையில் அரசு விழாவில் கலந்துகொண்டு பண்ணிய கலாட்டா பரவலாக அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

அப்படி என்னதான் நடந்தது..? இரண்டு தினங்களுக்கு முன்பு கேரள சட்டசபையில் பணிபுரியும் இடது தொழிற்சங்கத்தை சேர்ந்த, பெண்கள் ஊழியர் சங்க ஆண்டு விழா, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. அதில் கேரளா சட்டமன்ற சபாநாயகர் சக்தன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் கலந்துகொள்ளத்தான் ஊர்வசிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் விழாவுக்கு வந்த ஊர்வசி குடித்துவிட்டு நிதானமிழந்த நிலையில் வந்துள்ளார். இதை சரியாக கவனிக்காத விழா பொறுப்பாளர்களும் மேடையில் பேச ஊர்வசிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர் விழாவுக்கு வந்தது கூட தமாதமாகத்தான். ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால் என்ன பேசவதென்று தெரியாமல் மேடையில் உளறியிருக்கிறார்.

விழா நடத்துபவர்கள் பி.ஜே.பியினரா இல்லை இடது சாரிகளா என்பது கூட தெரியாத அளவுக்கு அவரது உளறல் இருந்திருக்கிறது. இதை கேட்ட சபாநாயகர் சக்தன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை விழா மேடையிலிருந்து அப்புறப்படுத்த முயறி செய்தார்கள். ஆனால் அவர் மேடையில் இருந்து இறங்க மறுத்ததோடு தொடர்ந்து விடாப்பிடியாக பேசியிருக்கிறார்.

இது ஏதுடா வம்பா போச்சு என நினைத்த சபாநாயகர், அங்கிருந்தால் தேவையில்லாத பிரச்சனை வரலாம் என விழா அரங்கை விட்டு கொஞ்ச நேரம் வெளியேறினார். அந்த நிலையிலும் இதை எப்படியோ கவனித்திருக்கிறார் ஊர்வசி.. பிறகு அவரை ஒரு வழியாக மேடையில் இருந்து இறக்கி காரில் ஏற்றி அனுப்ப முயன்றிருக்கிறார்கள்.

ஆனால் அவர் காரில் ஏறாமல் விழா பொறுப்பாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக சபாநயாகர் எப்படி பாதியில் வெளியேறலாம் என கேட்டு, சொன்னதையே ‘திரும்ப திரும்ப பேசுற’ ரேஞ்சுக்கு சொல்லியிருக்கிறார். எப்படியோ அவரை சமாதானப்படுத்தி ஒரு வழியாக காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்கள் விழா அழைப்பாளர்கள்…

கார் கிளம்பிய பின்னர் கூட கண்ணாடியை திறந்து சத்தம்போட்டுக்கொண்டே ஊர்வசி சென்றதுதான் இன்னும் ஹைலைட்டான விஷயம்.தனது முதல் கணவர் மனோஜ் கே.ஜெயனுடன் விவாவரத்து வழக்கு நடந்தபோது கூட, ஊர்வசி இதே போன்று கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்ததும், நீதிபதி அவரை கண்டித்து அனுப்பியதும் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் ஊர்வசி இப்படி போதையில் கலாட்டா பண்ணியது மலையாள திரையுலகிலும் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளதாம்.. இனி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைப்பவர்கள், ட்ராபிக் போலீஸ் வைத்திருப்பதுபோல குடியை கண்டுபிடிக்கும் கருவியை வாசலிலேயே வைத்துக்கொண்டு வருவோர் போவோரை எல்லாம் வாயை ஊதச்சொல்லி நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.