கமலின் புதிய படத்தில் வடிவேலு?


கமல் நடிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை தற்போது கமல் மீண்டும் தொடங்க இருக்கிறார்.

இது தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதில் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. ஆகவே தலைவன் இருக்கின்றான் படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்வார் என்ற கருத்து நிலவுகிறது.

மேலும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்துள்ளனர். கமல் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இது அரசியல் படமாக உருவாகும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆகவே கமலுக்கு அரசியலில் அடுத்த கட்ட நகர்விற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போல் படத்தின் டைட்டிலும் அமைந்துள்ளது.