மன்னர் வேஷத்திற்கு நோ-எண்ட்ரி போட்ட வடிவேலு..!

vadivelu_new_movie_news

தன் நகைச்சுவையால் பலரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து, கவலைகளை மறக்கடித்து, அனைவரின் குடும்பத்திலும் ஒருவராய் உறவாடப்பட்ட வடிவேலு சிறு இடைவேளைக்குபின் தெனாலிராமன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மிண்டும் தன் நகைச்சுவை பயணத்தை துவங்கினார்.எதிர்பார்த்ததுபோலவே தெனாலிராமன் படமும் வடிவேலுவின் நகைச்சுவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்க்கப்பட்டுள்ளது.

தற்போது வடிவேலு மிண்டும் ஒரு புதியப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் மீண்டும் வடிவேலுவை வைத்து இப்படத்தை இயக்கவிருக்கிறார். 1970களில் தழுவிய கதையை கொண்டது இப்படம். பயப்படாதீங்க இந்த படத்தில் மன்னர் வேடமெல்லாம் இல்லையாம்… ஒஹோ பிக்சர்ஸ் சார்பாக ஜி.ராம்குமார் இப்படத்தைதயாரிக்கிறார். படத்திற்கு இசை இமான், ஒளிப்பதிவு – கோபிஅமர்நாத், கலை – தோட்டாதரணி, படத்தொகுப்பு – ராஜாமுகமது. படபிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது.