பாதுகாப்பு கவசம் அணிந்திருக்கிறீர்களா ; நடிகரை அதிரவைத்த வரலட்சுமி


யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே தற்போது இயக்கியுள்ள படம் தான் காட்டேரி. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் வில்லன் நடிகரான ரவிமரியா காமெடி கேரக்டரில் அதுவும் பெண் வேடத்தில் நடித்துள்ளாராம். இந்தப்படத்தில் வரலட்சுமியுடன் நடித்த அனுபவம் குறித்து ரவிமரியா என்ன கூறியுள்ளார் என கேளுங்களேன்..

:ஒரு காட்சியில் அவர் என்னை உதைக்க வேண்டும்.. என்னிடம் பாதுகாப்பது கவசம் அணிந்திருக்கீங்களா என கேட்டார் வரலட்சுமி..நான் எதற்கு என கேட்க அவரோ ரொம்ப கூலாக, ‘நான் பாலா சார் ஸ்டூடண்ட்.. உதைக்கிறது எல்லாமே ரியலாவே பண்ணித்தான் பழக்கம் என கூற கொஞ்சம் பயத்துடனேயே தான் வரலட்சுமியுடன் நடித்தாராம் ரவிமரியா.