கிராம மக்களின் பொழுதுபோக்கே “வீரத் திருவிழா”

வி.சேகர் உதவியாளர் கே.விஜயமுரளிதர் இயக்கும் “வீரத் திருவிழா”

ஸ்ரீ செல்லாத்தாள் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லெனின் செல்வகுமார் தயாரிக்கும் படத்திற்கு ”வீரத் திருவிழா” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் புதுமுகம் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக தேனிகா நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன்,காதல் சுகுமார், பசங்க சிவகுமார்,செந்தி,நஜீர், தமில்செல்வா, கலை, செல்வம், சிட்டு, சேட்டுபாலா, லெனின்,ஆரவாயல் ராமன்,கவிதா பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஹார்முக்
இசை – ஈ.எஸ். ராம்ராஜ்
பாடல்கள் – சினேகன், ஆர்.எம்.இயற்கை அரசன்
கலை – முருகமணி
எடிட்டிங் – சதீஷ்குமார்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
தயாரிப்பு நிர்வாகம் – பி.கார்த்திகேயன்
அலுவலக நிர்வாகம் – ஆரவாயல் ராமன்
தயாரிப்பு – லெனின் செல்வகுமார்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.விஜயமுரளிதர். இவர் இயக்குனர் வி.சேகரிடம் பதினாறு படங்களில் வைரமணி என்ற பெயரில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர்…..

கிராமத்து மண்ணுக்கே உரிய வீரம்,கலாச்சாராம், காதல், ஆத்மார்த்தமான நட்பு இதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறேன்.

நகரத்து மக்களுக்கு எவ்வளவோ பொழுதுபோக்கு விஷயங்கள் இருக்கு ஆனால் கிராமத்து மக்களுக்கு உள்ள பொழுதுபோக்கே இந்த படத்தின் திரைக்கதையாக்கி இருக்கிறோம்.

பக்கா கமர்ஷியல் படமாக வீரத் திருவிழா உருவாகி உள்ளது என்கிறார் இயக்குனர் கே.விஜயமுரளிதர்.