சிலம்பரசன் பெயரை மாற்றிய வெற்றிமாறன்..!


வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விசாரணை படத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படும் கைதிகள் அனுபவிக்கும் சித்தரவதையை தத்ரூபமாக காட்டியிருந்தார்கள் அல்லவா..? படத்தில் இந்தப்பிரச்சனைக்கு மூலகாரணமாக அமைந்தது அப்சல் என்கிற கதாபாத்திரம் தான்.

இந்த அப்சல் விஜய் டிவி ஆடிஷன்களில் எல்லாம் பங்கெடுத்தவர். வெற்றிமாறன் கலந்துகொண்ட ஒரு கல்லூரி விழாவில் பங்கெடுத்து அவரது கவனத்தை ஈர்த்தாராம். ‘விசாரணை’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது சந்தோஷமாக ஒப்புக்கொண்ட இவர் தனது பெயரை அப்சல் என படத்தின் கதாபாத்திர பெயராகவே மாற்றிக்கொண்டாராம்.

இவரது உண்மையான பெயர் சிலம்பரசன் என்பதற்கும், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே ‘வடசென்னை’ படத்தில் நடிப்பதாக பேச்சு அடிபட்டு நின்றுபோனதற்கும் இப்போது இந்தப்படத்திற்காக பெயர் மாற்றப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நம்புங்கள்.