“நான் தியாகி இல்லைதான் அதற்காக துரோகி இல்லை” – கத்தி விழாவில் விஜய்

சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெறவிருந்த கத்தி திரைப்படத்தை எதிர்த்து தமிழ் அமைப்புகள் ஓட்டலுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினாலும்… அதை எல்லாம் மீறி காவல்துறையின் உதவியோடு பல கெடுபிடிகளுக்கு மத்தியில் விழாவை நடத்தி முடித்தது விழாக்குழு ..விழாவில் திரை உலக பிரமுகர்கள், ரசிகர்கள் என்று அரங்கு நிரம்பியது.

 

முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்து பேச வந்த விஜய்…

இந்த படம் சண்டை சச்சரவு இல்லாம எல்லா மக்களும் சந்தோசமா பார்க்கணும்னு எடுத்திருக்கோம். எந்த மக்களுக்கும் ஆதரவாகவும் இல்ல. எந்த மக்களுக்கும் எதிராகவும் இல்ல. “வதந்திகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தால் முடிவில் அதுவே உண்மையாகிவிடும், எனவே பேசாமல் இருப்பதே நலம் என்று தான் நான் கத்திக்கு வந்த எதிர்ப்புகளுக்கு இதுவரை பதில் எதுவும் சொல்லவில்லை .

தயாரிப்பு சார்பில் பதில் சொல்லிவிட்டாலும் நான் சில வார்த்தைகள் இங்கு சொல்லியே ஆகவேண்டும் “நான் தியாகி இல்லைதான் அதற்காக துரோகி இல்லை ” நான் ஒரு தமிழன் . என்றைக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழுக்கும் மரியாதை செய்ய கூடியவன் துரோகம் என்றைக்கும் செய்யமாட்டேன் என்று உணர்ச்சி பொங்க கூறினார் .

பின்னர் பேசிய இயக்குனர் முருகதாஸ் ..

இன்னும் தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் எனக்கு தெரியாது … தமிழ் நாட்டில் சென்னையையும் தாண்டி எதோ ஒரு கிராமத்திலிருந்து இந்தி சினிமா வரைக்கும் நீ வருகிறாயா ? என்று கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் ஒரு தமிழனாக இந்தி மற்றும் பிற மொழிகளிலும் படம் இயக்கினேன் … நான் பணத்துக்காக படம் இயக்குபவன் இல்லை .. எனக்கும் இந்த தமிழ் மண் தான் சோறு போடுகிறது .எனக்கும் தமிழ் ரத்தம்தான் ஓடுகிறது .. என்று அவரும் தன் பங்குக்கு பொங்கிவிட்டு போக….

அடுத்து பேச வந்த லைக்கா அதிபர் சுபாஷ்கரன்..

“பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்… காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்” என்று ரஜினி பாட்டை பாடி அவரும் பொங்க ….

“அட போங்கப்பா .. ஓட்டலுக்கு வெளியேயும் பொங்குரானுங்க .. உள்ள வந்தா இவனுங்ககளும் பொங்குரானுன்கப்பா” என்று ரசிகர்கள் முனுமுனுக்க ஆரம்பித்து விட்டனர் ..

மொத்தத்துல கத்தி விழாவில் உணர்ச்சி பொங்கலோ பொங்கல் ..