பிப்-5ஆம் தேதியே தான் ரிலீஸ் பண்ணனுமா..? ; அஜித் ரசிகர்களை உரசும் விஜய்..!


ஏற்கனவே அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் வாய்க்கா தகராறு ஓடிக்கிட்டு இருக்கு.. இதுல எரியுற நெருப்புல இன்னும் எண்ணெய் ஊத்துற மாதிரி காரியத்த பண்ணபோறாங்க.. இன்னைக்கு இரவு 12 மணிக்கு விஜய்யோட ‘தெறி’ படத்தின் டீசறை வெளியிட இருக்காங்க..

பிப்-5ஆம் தேதி அவ்வளவு பெரிய விஷேசமான நாளெல்லாம் ஒன்னும் இல்லை.. ஆனா இந்த தேதியில டீசறை வெளியிட காரணம் போன வருஷம் இதே பிப்-5ஆம் தேதி தன அஜித்தோட ‘என்னை அறிந்தால்’ படம் ரிலீஸ் ஆச்சு.. அதை சோஷியல் மீடியாவுல அஜித் ரசிகர்கள் கொண்டாடி எப்படியம் ட்ரெண்ட்ல முன்னணிக்கு கொண்டுவரணும்னு நினைப்பாங்க..

ஆனா ‘தெறி’ பட டீசர் வெளியான கவனம் எல்லாம் விஜய் பக்கம் திரும்பிரும்ல.. அதுக்குத்தான் நாள் பார்த்து வெளியிடுறாங்க.. இப்படித்தான் புலி படம்லாம் வெளியாகிறதுக்கு முன்னாடி, ஒருநாள் மாலை 7.30 மணியளவில் ‘புலி’ படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது. இதுவெளியாகி 4.30 மணி நேரங்களில் அதாவது 12 மணிக்கு அஜித்தின் ‘வேதாளம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது..

இதைவைத்து இரண்டு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டது இப்போது பதிலடி கொடுப்பது விஜய்யின் முறையோ என்னவோ..?.