ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் தவிடுபொடியான விஜய்யின் அரசியல் கனவு.!


ரஜினியின் அரசியல் வருகை பல அரசியல்வாதிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளதுடன், முதல்வர் நாற்காலிக்கு பக்கத்தில் நெருங்கிவிட்டோம் என ஒரு சிலர் கண்ட கனவையும் தரைமட்டமாக்கிவிட்டது. அரசியல்வாதிகள் என்றில்லை. குறிப்பாக நடிகர்களில் முதல்வர் நாற்காலி கனவு கண்டுகொண்டிருந்த விஜய்க்கு மிகப்பெரிய ஆப்பு அடித்துவிட்டது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த கடந்த நான்கு வருட காலங்களில் தனது படங்களில் அரசியல் பற்றி விஜய் அடக்கி வாசித்தார் என்பதை விட, அடக்கி வாசிக்க வைக்கப்பட்டார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். சென்சார் மற்றும் ரிலீஸ், வரிவிலக்கு என் அப்ள தரப்பிலும் பிரச்சனைகளை சந்தித்ததால் படங்களில் பெரிதாக அரசியல் பேசவில்லை..

புலி படத்தில் கூட முதல்வர் ஜெயலலிதாவை நல்லவர் என்றும் அவரை சுற்றி இருப்பவர்களால் தான் அவருக்கு கெட்ட பெயர் என்றும் ஸ்ரீதேவி கேரக்டர் மூலமாக மறைமுகமாக சொல்லியிருந்தார். அதற்கே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சிறிது தைரியம் பெற்ற விஜய் கடந்த தீபாவாளிக்கு அட்லி டைரக்சனில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் அரசியல் பஞ்ச் பேசி நூல் விட்டு பார்த்திருந்தார்.

இது போதாதென்று அவரது தந்தையும் விஜய்யின் முதல்வர் கனவுக்கு தூபம் போட்டு வளர்த்துவந்தார். இந்தநிளியில் தான் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை நிகழ்த்தியது விஜய்யையும் அவரை விட அவரது தந்தையையும் நிலைகுலைய வைத்துள்ளது. எந்த நேரத்தில் இளைய தளபதி என்கிற அடைமொழியை ‘தளபதி’ என மாற்றினாரோ, இனி அரசியலில் அந்த தளபதிக்கு என்ன கதியோ, அதேதான் விஜய்க்கும் என பலரும் பேசி வருகின்றனர். ரஜினி அரசியலுக்குள் வந்துவிட்டதால், விஜய் இனி தனது அரசியல் கனவுகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி, இனிமேலாவது நல்ல படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.