மீண்டும் சத்யன் ; காமெடியன் விஷயத்தில் தடுமாறும் விஜய்..!


விஜய் படங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு ஆக்சன் உண்டோ அந்த அளவுக்கு காமெடி காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருந்து வந்தது.. ஆனால் சமீப காலமாக அவரது படங்களில் காமெடியில் வறட்சியே நிலவுகிறது. அதற்கு காரணம் விஜய்க்கு ஈடுகொடுத்து பேலன்ஸ் செய்யும் சரியான காமெடியன் இல்லாததுதான் என்றே சொல்லப்படுகிறது.

குறிப்பாக விஜய்யின் நண்பனாக காமெடி வேடத்தில் சதீஷ் நடித்த ‘கத்தி’, ‘பைரவா’ ஆகிய படங்களில் காமெடி எடுபடவில்லை.. அதாவது சதீஷுக்கு காமெடி சரிவர வரவில்லை. அதனால் விஜய்யாலும் அதை பேலன்ஸ் பண்ண முடியவில்லை.. தம்பி ராமையாவின் ஜோடியும் விஜய்க்கு செட்டாகவில்லை.

நான் கடவுள் ராஜேந்திரனையும் வைத்து விஜய்யால் முழுப்படத்திற்கும் காமெடியில் சமாளிக்க முடியாது என்பதே நிலைமை. ஜில்லா படத்தில் சூரி இருந்ததால் ஓரளவு ரசிக்க முடிந்தது.. இப்போது சூரி ரொம்ப பிஸியாக இருக்கிறார். சந்தானமோ ஹீரோவாகி விட்டார். அதனால் அட்லீயுடன் தான் நடிக்கும் புதிய படத்தில் சத்யனை மீண்டும் காமெடி கூட்டணி சேர்த்துள்ளார் விஜய்.

சத்யனுடன் விஜய் கூட்டணி இதற்கு முன் ஓரளவு ரசிக்கும்படி இருந்ததால் மினிமம் கியாரண்டி காமெடிக்கு உத்தரவாதம் உண்டு தான். இருந்தாலும் இயக்குனர்களும் தங்களது காமெடி எல்லையை விரிவுபடுத்தினால் தான் ஒர்க் அவுட் ஆகும்.. விஜய்க்கு இப்போது ஹீரோயின் தேடுவதைவிட காமெடியன் தேடுவதுதான் பெரிய தலைவலியாக இருக்கும்போல தெரிகிறது.