த்ரிஷாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் உள்ள ஆச்சர்யமான ஒற்றுமை இதுதான்..!


நயன்தாரா, தமன்னா என தொடர்ந்து முன்னணி நடிகைகளுடன் நடித்துவரும் விஜய்சேதுபதி, அவர்களுக்கெல்லாம் முன்னால் சினிமாவில் அறிமுகமாகி இன்றுவரை கதாநாயகியாகவே நடித்துவரும் த்ரிஷாவுடனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்குனராக மாறியுள்ள ‘96’ படத்தில் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் தங்களது திரையுலக பயணத்தை ஆரம்பித்ததில் உள்ள ஒற்றுமைதான்.. சிம்ரன் நடித்த படத்தில் அவருக்கு தோழியாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சில் நடித்து, பின்னர் படிப்படியாக கதாநாயகியானவர் தான் த்ரிஷா.

அதேபோலத்தான் தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி இன்று கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்திருப்பவர் விஜய்சேதுபதி.. இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது என்பது உண்மையிலேயே பொருத்தமான, அதேசமயம் அருமையான விஷயம் தான் என்கிறார்கள் திரையுலகினர்..