ஜூங்கா நட்டத்தை சரிக்கட்ட விஜய்சேதுபதி எடுத்த அதிரடி முடிவு..!


மிகப்பெரிய பில்டப்புகளுடன் வெளியானது விஜய்சேதுபதி நடித்த ஜூங்கா.. ஆனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அளவுக்கு படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.. வசூல் ரீதியாக விநியோகஸ்தர்களையும் திருப்திப்படுத்தவில்லை.

இப்போதுதான் படம் சரியாக ஓடவில்லையென்றால் சம்பந்தப்பட்ட நடிகரையும் தயாரிப்பாளரையும் விநியோகஸ்தர்கள் முற்றுகை இட ஆரம்பித்துவிடுகிறார்களே.. அந்தவகையில் ஜூங்காவல் ஏற்பட்ட விஜய்சேதுபதியை சந்தித்த விநியோகஸ்தர்கள் நட்டத்தை ஈடு செய்யும்படி விஜய்சேதுபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

அவரும் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, தான் தயாரித்து நீண்டநாளாக கிடப்பில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தை அவர்களுக்கு குறைந்த விலையில் கொடுத்துள்ளார். இந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை படம் திடீரென வெளியாவதாக அறிவிக்கப்பட்டதன் பின்னணி இதுதான்..