“ஒரு நடிகன் எப்படி இருக்கணும்னா..” ; சிம்புவை மறைமுகமாக வெளுத்த விஜய்சேதுபதி..!


ஒரு தயாரிப்பாளரை, இயக்குனரை சிம்பு கதரவிடும் பாணி உலகமே அறிந்தது. ஏன் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை, வாழ்க்கையை இந்த மனிதர் வீணடித்துக்கொள்கிறார் என்கிற எண்ணம் எல்லோருக்குமே ஏற்படும். ஒரு நடிகன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என சமீபத்தில் கீ’ பட விழாவில் விஜய்சேதுபதி பேசியபோது அது சிம்புவுக்கு அவர் எடுத்த பாடமாகவே தோன்றியது..

“சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரிப் பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப் பேசுகிறார்கள். பொதுவாக, மொத்தமாக சினிமாக்காரர்களை கை காட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது. எங்களை தரக்குறைவாக நினைப்பவர்கள் சினிமாவுக்கு வந்து ஒரு படம் எடுத்துப் பாருங்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியும். ஒரு படம் எடுத்து முடிக்கும்போதும் உயிர் போய் உயிர் வருகிறது.

நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டா இருந்த காலத்தில் இருந்தே இந்தப் படம் நன்றாக மக்கள் வரவேற்பைப் பெற்று ஓடுகிறது என்றால், அந்தப் படத்தில் நடித்த கேரக்டர் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஒரு படம் ஓடும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோரும் வேலை செய்கிறோம். அதற்குதான் முக்கியத்துவம் தருகிறோம்.

ஒரு படம் எடுக்க முயலும் தயாரிப்பாளரை நாம் பாராட்ட வேண்டும். அந்தப் படம் ஓடவில்லையென்றால் அவருக்குதான் பாதிப்பு. அந்த ரா மெட்டீரியலை வைத்து அவரால் எதுவும் செய்ய முடியாது. கண்ணுக்குத் தெரியாத ஒரு புராடக்ட்டை நம்பி பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வருகிற தயாரிப்பாளர்களின் தைரியத்தை மிகப் பெரிய அளவில் பாராட்ட வேண்டும். அதற்கான பொறுப்பை உணர்ந்துதான் இங்கு எல்லோரும் படம் பண்ணுகிறோம். அந்த பயமும், பாதுகாப்பும் தயாரிப்பாளர் உள்ளொட்ட எல்லோருக்கும் உள்ளது.

நான்கு படங்கள் ஓடவில்லையென்றால் யாரும், யார் வீட்டுப் பக்கமும் வரவே மாட்டார்கள். நடிகனை சீண்ட மாட்டார்கள். அப்போது நடிகன் என்ன கத்திப் பேசினாலும் கண்டுகொள்ள ஆள் இருக்காது. வெற்றியடைந்தால், ஓடிக்கொண்டே இருந்தால்தான் இங்கு மதிப்பு. மற்றபடி உலகத்திலேயே சிறந்த கருத்தைச் சொல்லும் நல்ல மனிதராக இருந்தாலும் உங்களை மதிக்க ஒருவனும் வரமாட்டான்.

நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? நமக்கு பவர் இருக்கிறதா? இல்லையா? பவர் வைத்துதான் இங்கு மரியாதை. அதுவும் போய்விட்டால், நாம் சோர்ந்துபோனால் அந்த இடத்திற்கு இன்னொருத்தன் வருவான்” என்று விஜய் சேதுபதி பேசினார். இது சிம்புவுக்கு சரியாக பொருந்துகிறது தானே..?