இளவரசர் நடிக்க வேண்டுமென்றால் இந்த புறா ஆடவேண்டுமாம்


விஜய்சேதுபதியை பொறுத்தவரை நட்புக்காக ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டாரே தவிர, கெஸ்ட் ரோலில் நடித்து தருவதில் அவருக்கு பெரிய மறுப்பு ஏதும் இருந்ததில்லை. அந்தவகையில் அதர்வா நடித்துவரும் இமைக்கா நொடிகள் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சொல்லி கேட்டபோது முதலில் கொஞ்சம் யோசித்தார்..

ஆனால் கொஞ்ச நேரம் வரும் கேரக்டர் தான் என்றாலும் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிப்பது போன்ற கேரக்டர் என்று சொல்லப்பட்டதாம்… மீண்டும் நயன்தாராவுடனா என சந்தோஷப்பட்ட விஜய்சேதுபதி, நடிக்கிறதுதான் நடிக்கிறோம், அப்படியே நயன்தாராவுக்கும் எனக்கும் ஒரு டூயட் பாடலையும் சேர்த்துடுங்க என சின்னதாக ஒரு கண்டிஷனையும் போட்டுவிட்டாராம்.