“தம்பி நான் உண்மையான ஜென்டில்மேன் இல்லை” – டென்சன் ஆன விக்ரமன்..!

திரையுலகில் நடத்தப்படும் சினிமா விழாக்களை நடத்த பெரும்பாலும் சின்னத்திரை அல்லது வானொலி புகழ் தொகுப்பாளர்களைத்தான் அழைக்கின்றனர். டிடி, ரம்யா போன்றவர்கள் விழாவிற்கு வரும் வி.ஐ.பிகளின் தரம் அறிந்து நேர்த்தியாக தொகுத்து வழங்குவதால் இவர்களால் யாருக்கும் எந்த மன சங்கடமும் ஏற்படுவதில்லை. ஆனால் சினிமாவைப்பற்றி நன்கு அறியாத, எழுதிக்கொடுத்ததை அப்படியே வாசிக்கின்ற சில பெண் தொகுப்பாளர்கள் தான் பேசத்தெரியாமல் பேசி, மாட்டிகொள்வதுண்டு..

ஒரு விழாவில் பலரையும் அடைமொழி கொடுத்து கவிதையாக அழைத்த ஒரு தொகுப்பாளினி, இயக்குனரும் நடிகருமான சிங்கம்புலியை அழைக்கும்போது வெகு சாதாரணமாக அடுத்து சிங்கம்புலி பேசுவார் என்று சொல்லிவிட்டார். அவ்வளவு தான் மைக்கை பிடித்த சிங்கம்புலி, நான் அல்டிமேட் ஸ்டார் அஜித்தை வைத்து படம் இயகியவன், சூர்யாவை வைத்தும் படம் இயக்கியவன்… ஒருவரை எப்படி மரியாதையாக அழைக்கவேண்டுமென்று கற்றுக்கொள்ளுங்கள் என அந்த தொகுப்பாளினியைலெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டார்.

இதேபோலத்தான் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்.கே நடித்த ‘என் வழி தனி வழி’ படத்தின் விழாவை தொகுத்து வழங்கிய காமெடி டைம் அர்ச்சனா, விழாவிற்கு தாமதமாக வந்து, தொகுத்து வழங்க ஆரம்பித்ததோடு நடிகர்சங்க தலைவரான ராதாரவியை பேச அழைக்கும்போது மரியாதைக்குறைவாக அழைத்து அவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். தற்போது மீண்டும் ஒரு தொகுப்பாளர் ஒரு வி.ஐ.பி ஒருவரை டென்சனாக்கிய சம்பவம் நேற்று நடந்தது.

ஏ.எல்.விஜய்யுடன் ஜி.வி.பிரகாஷ் ஏழாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள ‘இது என்ன மாயம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.. விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப்படத்தை ராதிகா, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த விழாவை மூன்று ரேடியோ ஜாக்கிகள் தொகுத்து வழங்கினர். வழக்கமாக ஒருவர் தொகுத்து வழங்கினாலே அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கும்.. இங்கேயும் அப்படித்தான் நடந்தது. இரண்டு பேர் மேடையிலேயே நின்றுகொள்ள, புதுமை ஸெய்கிரெ௩ந் பேர்வழி என, மேடையை வீடு கீழே இறங்கி வி.ஐ.பி.கள் இடத்துக்கே மைக்கை கொண்டு வந்த ஆர்.ஜே பாலாஜி, இயக்குனர் விக்ரமனை ‘சென்டிமென்ட்டா ஏதாவது சொல்லுங்க சார்’ கலாய்த்தார். அதாவது செண்டிமென்ட்டாவே படம் எடுக்குறவருன்னு சொல்றாராம்.

இதனால் சூடான விக்ரமன், “தம்பி இதுவரை நான் எடுத்த படங்கள்ல எப்பவுமே காமெடிதான் அதிகமா இருக்கும்.. நானும் காலேஜ்ல எல்லா கலாட்டாவும் பண்ணிட்டு வந்தவன் தான். நான் வெளியில பாக்குறதுக்குத்தான் ரியல் ஜென்டில்மேன் மாதிரி காட்டிக்கிட்டு இருக்கேன்.. ஆனா உண்மையில நான் ஜென்டில்மேனே இல்லை” என சொல்ல வேர்த்து விறுவிறுத்து ஜெர்க் ஆன பாலாஜி, அடுத்து அவர் இருந்த திசை பக்கமே வரவில்லை.

ஏம்ப்பா ரேடியோவுல பேசுற மாதிரியே, வி.ஐ.பிங்க கிட்டயும் பேசுனா வேலைக்கு ஆகுமா..?