சம்பளம் கொடுத்தா சரத்குமார் கூட கூட்டணி வைக்க விஷால் தயாராம்..!

சில தினங்களுக்கு முன் தான் நடித்த ‘கத்தி சண்டை’ படத்தின் புரமோஷனுக்காக லைவ் சாட் பண்ணினார் விஷால். அப்போது சரத்குமார் பற்றியும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.. சரத்குமாருக்கும் அவருக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராறு இருப்பது சின்னக்குழந்தைக்கு கூட தெரியுமே..

ஆனாலும் சரத்குமார் தயாரிப்பில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “நடிக்க தயார்.. ஆனால் சம்பளம் கொடுப்பாங்களா என பதில் கூறினார்.. மேலும் செவன் பௌண்ட்ஸ் எனும் ஆங்கில படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார். தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் வெள்ளை ராஜா கருப்பு ராஜா படம் விரைவில் தொடங்க இருப்பதாகவும்

மேலும் பெர்சனலாக சில விஷயங்களை பகிர்ந்துகொண்ட விஷால், கண்டிப்பாக 2017 இல் தனது திருமணம் இல்லை என தெரிவித்தார்.. சினிமாவில் தன்னுடைய ரோல் மடல் கமல்ஹாசன் எனவும் , தான் நடித்த படங்களில் தனக்கு பிடித்த படம் அவன் இவன் எனவும், தனக்கு பிடித்த இடம் மேகமலை எனவும், விஜய் படங்களில் தனக்கு பூவே உனக்காக பிடிக்கும் எனவும், தெரிவித்தார்.