அதெல்லாம் பொய்யா கோபால்..? ; தாடி பாலாஜிக்கு தண்ணிகாட்டிய நித்யா


எங்க வீட்டு ராமாயணம் போல தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரின் விவகாரம் கடந்த சில நாட்களாகவே பத்திரிக்கைகளில் நாறி வருகிறது.. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இவர்களது குடும்ப பிரச்சனை மிக பகிரங்கமாக பூதாகரமாக உருவெடுத்து, அதன்பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அந்த நிலையில் இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த விஜய் டிவி இவர்கள் இருவரையுமே பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக உலவ விட்டது.. அங்கே கமலின் அறிவுரையாலும் சக போட்டியாளர்கள் ஆலோசனைகளாலும் மனம் மாறிய நித்யாவும் தாடி பாலாஜியின் தங்களது குழந்தைக்காக இணைந்து வாழ்வதாக, இனி பிரச்சினைகள் இல்லாமல் வாழப் போவதாக கமல் முன்பே உறுதி அளித்தனர்

ஆனால் சமீபத்தில் தாடி பாலாஜி கொடுத்துவரும் பேட்டிகளை பார்க்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்பு வீட்டிற்கு சென்ற பாலாஜியை நித்யா சேர்க்கவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒளியப்போனவன் தலையாரி வீட்டில் நுழைந்த கதையாக, தன் மனைவியை பற்றி தகவல் சொல்வதற்காக ஒரு போலீஸ்கார நண்பனின் துணையை தாடி பாலாஜி நாடியுள்ளார். அந்த போலீஸ்கார நண்பனை நித்யா தன் வசப்படுத்திக்கொண்டு அவரையே வைத்து தாடி பாலாஜியை மிரட்டும் அளவுக்கு நிலை சென்றுள்ளது ஆக கமல் என்ன புத்திமதி கூறியும் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கமலுக்கே தண்ணி காட்டிவிட்டார் நித்யா பாலாஜி.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *