சிறையில் இருக்கும் நடிகருக்கும் சொல்வதெல்லாம் உண்மை நடிகைக்கும் என்ன பிரச்சனை..?


மலையாள நடிகர் திலீப் நடிகை விவகாரத்தில் சிக்கி சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் திலீப்புக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் ஏதா லடாய் என்கிற தகவலும் மீடியாவில் கசிந்துள்ளது. தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்க வருவதற்கு முன்பே மலையாளத்தில் அவர் நடித்த முதல் படமான ‘சக்கர முத்து’ படத்தில் திலீப் தான் ஹீரோவாக நடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் திலீப் நடித்த ‘கொல்கத்தா நியூஸ்’ படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதாக இருந்ததது.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அப்படி நீக்கப்பட்டதன் பின்னணியில் திலீப் தான் காரணம் என லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னாராம்.

ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணனோ, அந்தமாதிரி நிகழ்வு எதுவும் நடக்கவில்லை எனவும் திலீப்பை பற்றி அப்படி எதுவும் தான் கூறவில்லை எனவும் காட்டமாக கூறியுள்ளார். நான் சொல்லாததை சொன்னதாக திரித்து கூறுவது தவறு. நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு ஆளான ஒருவர் பற்றி தேவையில்லாமல் பேசுவது தவறு என்கிற அடிப்படை அறிவு கூடவா எனக்கு இருக்காது” என காரசாரமாக கூறியுள்ளாராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *