பில்லா-3 ; அடப்பாவிகளா.. ரஜினி, அஜித் இடத்தில் சிம்புவா..?


ரஜினி நடித்த பில்லா’ படம் சூப்பர் ஹிட்டானது வரலாறு, இப்போது பில்லா படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்களாம்.. இந்தப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.. ஆனால் பில்லாவாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா விரலை வைத்து வித்தை காட்டும் நடிகர் சிம்பு தானாம்.

ரஜினிக்குப்பின் பல வருடங்கள் கழித்து பில்லா படத்தை அஜித்தை வைத்து அதே பில்லா’ என்கிற பெயரில் ரீமேக் செய்தார்கள். ரசிகர்கள் அதை ஏற்றுக்கொண்டதால் அந்தப்படம் ஹிட்டானது. அனால் அதே சமயம் அதே அஜித்தை வைத்து எடுக்கப்பட்ட ‘பில்லா-2’ கதை சரியில்லாததால் பிளாப் ஆனது. இப்போது சிம்புவை வைத்து ‘பில்லா-3’ எடுக்கப்போகிறார்கள் என்றால் இதைவிட காலக்கொடுமை வேறு இருக்க முடியுமா..?