நான் ஏன்ய்யா அவனை பாலோ பண்ணனும் ..? நல்ல கதையா இருக்கே..?


படத்தை டைமுக்கு ரிலீஸ் பண்ணுகிறாரோ இல்லையோ ரசிகர்களை மண்டை காயவிடுவதில் மட்டும் குறைவைக்க மாட்டார் இயக்குனர் கௌதம் மேனன்.. அந்தவகையில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்கிற கேள்வியை எழுப்பி மண்டை காயவிட்டுள்ளார் கௌதம்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ‘மறு வார்த்தை பேசாதே’ பாடல் வெளியானது.

ரசிகர்கள் மத்தியிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற ஆரம்பித்ததுமே, இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தேடும் பணியில் ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டனர்.. அவருக்கு தற்காலிகமாக ‘மிஸ்டர் எக்ஸ்’ என பெயர் வைத்து ‘பாலோ மிஸ்டர் எக்ஸ்’ என ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்..

“நான் ஏன்ய்யா நடுசாமத்துல சுடுகாட்டுக்கு போகணும்” என வடிவேலு ஒரு படத்தில் கேட்பதுபோல, “நான் ஏன்ய்யா அவனை பாலோ பண்ணனும்.. நல்ல கதையா இருக்கே” என சில குறும்புக்கார ரசிகர்கள் மீம்ஸ் தட்டி வருகிறார்கள்..