துல்கரையும் கார்த்தியையும் மணிரத்னம் தேடுவதற்கு இதுதான் காரணமா..?


இதுநாள் வரை வெளியான மணிரத்னம் படங்களில், குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் அவர் இயக்கிய படங்களை கவனித்து பார்த்தால் அவர் கதைக்காகத்தான் ஹீரோக்களை தேடுகிறாரே தவிர, ஹீரோக்களுக்காக கதை பண்ணுவதில்லை என்பது புரியும்..அதுதான் அவரது தனித்தன்மையாக அடையாளம் காட்டப்படுகிறது என்பதும் தெரிந்த விஷயம் தான்..

ஆனால் கடந்த வருடம் ஏப்ரலில் துல்கர் சல்மானை வைத்து அவர் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படம் ஹிட்டான பின்னும் கூட அவரது அடுத்த படம் துவங்கினாரா இல்லையா என்பதே இன்னும் தெரியவில்லை.. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் துல்கர் சல்மானை நடிக்க வைக்க முயற்சித்ததாகவும், அவரது கால்ஷீட் மொத்தமாக கிடைக்காததால் கார்த்தியை வைத்து இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏன் பெரிய ஹீரோக்கள் வான்டட் ஆக இவரது படத்தில் நடிக்க முன் வருவதில்லை.? ஐவரும் ஏன் துல்கர், கார்த்தி என்றே தேடிப்போகிறார் என்றால் அதிலும் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளதாம். அதாவது இவரது படங்களை இவரே தயாரிப்பதால் சம்பள விஷயத்தில் ரொம்பவே சிக்கனமாக இருப்பாராம். பெரிய ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுத்து கட்டுபடி ஆகாதில்லையா..?

ஆனால் துல்கர் சல்மான் என்றால் மலையாள நடிகர் அல்லவா..? அங்கே சம்பளம் ரொம்பவே குறைவு என்பதாலும், மணிரத்னம் மூலமாக தமிழுக்கு வருகிறோம் என்பதாலும் துல்கரும் கொடுப்பதை வாங்கிக்கொள்வார்… அதேசமயம் கார்த்தி, நடிகராவதற்கு முன்பே மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர்.. அதனால் குருநாதர் படத்தில் கறாராக சம்பளம் பேசமுடியாது.. அதேசமயம் மணிரத்னம் படத்தில் நடித்தால் தனக்கும் புது மைலேஜ் கிடைக்கும் என நினைப்பார் இல்லையா..? இதனால் தான் இவர்கள் இருவரை மட்டுமே மணிரத்னம் தேடுவதாக சொல்லப்படுகிறது