குப்பை படத்துக்கு கிடைத்த ரஜினி டைட்டில் விஜய் படத்துக்கு கிடைக்காதது ஏன்..?


கடந்த வாரம் வெளியான ஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தை நான்கே நாட்களில் தூக்கி விட்டு பல தியேட்டர்காரர்களும் ‘பிச்சைக்காரன்’ படத்தை மாற்றிவிட்டார்கள்.. இந்தப்பட ரிலீஸுக்கு பிறகு ஒன்பதுல குரு உக்காருவான் என நினைத்துக்கொண்டு இருக்க, இப்போது ஒன்பதுல சனி உக்கார்ந்திருச்சே என புலம்பி வருகிறாராம் தயாரிப்பாளர். இந்தப்படத்தின் பப்ளிசிட்டிக்கு நல்லதாக நாலு ஸ்டில்களை கூட தரமுடியாத இவரெல்லாம் படம் ஓடும் என எப்படி எதிர்பார்க்கிறார் என நக்கலாக சிரிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்திற்கு அதுவும் போலீஸ் வேடத்திலும் நடிக்கும் படத்திற்கு பொருத்தமாக ‘மூன்றுமுகம்’ என்ற தலைப்பை கேட்டும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் கொடுக்க மறுத்துவிட்டதாக அப்போது சொல்லப்பட்டது..

ஆனால் இப்போது ஒன்றுக்கும் உதவாத குப்பை படத்துக்கு மட்டும் எப்படி ‘போக்கிரி ராஜா’ என ரஜினி டைட்டிலை தந்தார்கள் என ஒருபக்கம் விஜய் ரசிகர்கள் கொடி பிடித்துக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கமோ இனிமேல் ரஜினி டைட்டிலை எவனுக்குமே தரக்கூடாது, தரவும் விடக்கூடாது என தீர்மானமே போட்டிருக்கிறார்களாம் ரஜினி ரசிகர்கள்..

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *