சூப்பர் கண்ணா ; ஆனா இப்ப இது நமக்கு செட்டாகாதே


கபாலி, காலா என ரஞ்சித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றிவிட்ட ரஜினி, தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிக்கு ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன் ஆகியோர் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக சில இளம் இயக்குநர்களும் ரஜினியிடம் கதை சொல்ல ஆர்வம் காட்டி வருகின்றனராம். அந்த வரிசையில், ஜீவா நடித்த சிங்கம் புலி, ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கிய சாய்ரமணியும், டார்ஜிலிங் படப்பிடிப்புக்கு ரஜினி செல்வதற்கு முன்பு அவரை சந்தித்து, பாட்ஷா பாணியில் ஒரு அதிரடியான ஆக்சன் கதையை சொன்னாராம்.

அந்த கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னாராம் ரஜினி. அதேசமயம், இனிமேல் இந்த மாதிரியான கதைகளில் நான் நடிப்பது சரியாக இருக்காது என்று சொல்லி அன்பாக தவிர்த்து விட்டாராம். ரஜினி யாரையும் வேண்டுமென்றே நிராகரிப்பதில்லை.. அவர் சிலரை, சில விஷயங்களை தவிர்த்தால் அதில் நிச்சயம் காரணம் இருக்கவே செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *