ஜெயம் ரவிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..?


ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படத்தை கடந்த வருடம் மே-19ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தனர்… ஆனால் மே-3௦ முதல் போராட்டத்தில் திரையுலகம் இறங்க இருப்பதாக விஷால் அறிவித்ததை தொடர்ந்து படத்தை ஜூன்-23க்கு மாற்றி ரிலீஸ் செய்தனர். இதனால் அந்த சம்மருக்கான ஸ்பெஷல் கலெக்சனை மிஸ் பண்ணினார் ஜெயம் ரவி.

இப்போதும் அதேபோன்ற ஒரு இக்கட்டில் தான் ஜெயம் ரவி படம் சிக்கியுள்ளது நன்றாகவே தெரிகிறது. ஏற்கனவே ஜன-26ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவித்து, பின்னர் அதிலிருந்து சில காரணங்களால் பின் வாங்கினார்கள்.. இன்னும் புதிய தேதி அறிவிக்கப்படவும் இல்லை..

மார்ச்சில் தங்களது படத்தை வெளியிடலாம் என படக்குழுவினர் நாள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தான், தங்களது நியாமான பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச்-1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தினையும் வெளியிடுவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

வரும் பிப்-9 மற்றும் பிப்-16 தேதிககளில் ஏற்கனவே சில படங்கள் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டபடியால் பிப்-23ஆம் தேதி மட்டும் தான் கைவசம் இருக்கிறது. அதை விட்டுவிட்டால் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம் முடிந்து, அதன்பின் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.. ஆனால் அந்த தேதிகளுக்கு பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்த சூழலில் படக்குழுவினர் என்ன முடிவெடுப்பார்களோ தெரியவில்லை.. இது யாருக்கு பாதிப்போ இல்லையோ ஜெயம் ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு நிச்சயம் பாதிப்பு என்றே சொல்லப்படுகிறது. காரணம்.