“எங்களை மிரட்டவா ஒட்டு போட்டோம்..? ; கொந்தளிக்கும் விஜய்சேதுபதி


எப்போதும் நேர்மையான வாரத்தைகளையே பேசுபவர் விஜய்சேதுபதி. அதேசமயம் சமீபகாலமாக விஜய்சேதுபதியின் பேச்சில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சிறையில் வாடும் ஏழு பேர் விடுதலைக்காக ஆளுநருக்கு கோரிக்கை உள்பட பல வி‌ஷயங்களில் குரல் தருகிறீர்களே? என கேட்டால், “குரல் தருவது என்பது மனிதனுடைய இயல்பு. 28 ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டார்கள். போதும், அது முடிந்துவிட்டது. அவர்களை மன்னிக்கலாமே. இதைத் தாண்டிப் பேசினால் அது அரசியல் சார்ந்து போய்விடும்” என்கிறார் மனிதர்.

அரசியல் பேசும் திரைப்படங்கள் அதிகரிக்கின்றன. உங்கள் படங்களிலும் அரசியல் இருக்குமா? என்கிற கேள்விக்கு, “இங்கே எல்லாமே அரசியல்தான். டி.வி, மிக்சியைப் பற்றி மட்டும் பேசுவது அரசியல் இல்லை. ஒரு சாதியைத் தூக்கிப்பேசுவது; இன்னொரு ஜாதியை இழிவுபடுத்துவது எல்லாமே அரசியல்தான். சினிமாக்கள் அரசியல் பேசணும். மக்களுக்கு வி‌ஷயங்கள் போய்ச் சேரணும். சென்சார் முடிஞ்சு வர்ற படங்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

மேலும், “சினிமாக்காரங்களுக்குக் குளிர்விட்டுப் போயிடுச்சு’ன்னு சொல்றாங்க. உங்களை ஓட்டு போட்டு உட்கார வெச்சுருக்கோம். எங்களை மிரட்டுறது உங்கள் வேலையே கிடையாது. எங்களுடைய கருத்து தவறா இருந்தா அதை எதிர்த்துக் கேள்வி கேட்கலாம். ஆனா, மிரட்டுவது ரொம்பத் தவறு” என ஆணித்தரமாக பதில் கூறியுள்ளார் விஜய்சேதுபதி..