வரிக்கு வரி போடுவது என்ன நியாயம்..? ; கொந்தளிக்கும் விக்ரமன்


பக்கத்து மாநிலமான கேரளாவில் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் சினிமா மீதான நகராட்சி வரியை சுத்தமாக நீக்கிவிட்டது கேரள அரசு. ஆனால் எக்ல்லாம் தெரிந்துகொண்டும் தமிழக அரசு கண்டும் காணதது போல 30 சதவீதம் கேளிக்கை வரியை விதித்துள்ளது. இது நியாயமா என என கொந்தளித்துள்ளார் இயக்குனர் விக்ரமன்.

‘நான் யாரென்று நீ சொல்’.. என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் விக்ரமன் தற்போதையை கேளிக்கை வரி பிரச்சனை குறித்தும் தனது கோரிக்கையை முன் வைத்தார்.

“நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும் இழப்பு. வருமானத்தில் மொத்தம் 65 % வரியாக போனால் எப்படி சினிமா வாழும்..? வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும். ஜி.எஸ்.டி கட்ட தயாராக இருக்கிறார்கள்.. மாநில அரசு தனது வரியை நீக்க வேண்டும்.

கலையுலகிலிருந்து முதல்வராகி எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றியது மாதிரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரிவிலக்கு அளித்து சினிமாவை காப்பாற்ற வேண்டும்” என்று தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார் விக்ரமன்..