விஜய்க்கு மட்டும் இந்த சோதனை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது..?


ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய் தற்போது நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. சண் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்தநிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் அக்-2ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகி விட்டாலும், விழாவை நடத்த இன்னும் தோதான இடம் கிடைக்காமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்களாம்.

நேரு ஸ்டேடியம், சேப்பாக்கம் ஸ்டேடியம், ஒய்.எம்.சி.ஏ மைதானம் என எல்லா இடங்களிலும் ‘சர்கார்’ ஆடியோ ரிலீஸுக்கு இடம் கேட்டபோது ‘நோ’ சொலப்பட்டு கதவு பூட்டப்பட்டது.
அவ்வளவு பெரிய நிறுவனமான சன் பிக்சர்சால் சாதிக்க முடியவில்லையா என கேள்வி எழலாம்.. ஆனால் பிரச்சனையே விஜய்யினால் தான்.. விஜய்க்கும் ஆளுங்கட்சிக்கும் அம்மா உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருந்தது… அதுதான் இப்போது இந்த இடச்சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பின் எப்படி இந்த வருட துவக்கத்தில் மெர்சல் படத்திற்கு மட்டும் நேரு ஸ்டேடியத்தில் இடம் கொடுத்தார்கள் என்கிறீர்களா..? அதுதான் அரசியல் சூட்சுமம். இந்த நிலையில் தாம்பரத்தை தாண்டி அமைந்துள்ள சாய்ராம் கல்லூரியில் இந்த விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.