தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் ஏன் ஜெயிக்க கூடாது ; இதுதான் காரணமாம்..!


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப் படும்புதிய நிர்வாக குழு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 4 அன்று முடிவடைந்தது. நடிகர்கள் பெரும்பான்மையாக இடம் பெற்ற அணி அமைத்து தலைவர் பொறுப்புக்கு நடிகர் சங்க செயலாளர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். பிப்ரவரி 4 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தலைவர் பொறுப்புக்கு பல குழுக்களாக பிரிந்து தயாரிப்பாளர்கள் போட்டியிட்டாலும் நடிகர் விஷால் வேட்பு மனுவை ஏற்பதற்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததை எதிர்பார்க்காத விஷால் அதிர்ச்சிக்குள்ளானார்.

கருத்து வேறுபாடு காரணமாக பிளவுபட்டு இருந்த தயாரிப்பாளர்கள் தற்போது ஓரணியில் திரள தொடங்கியுள்ளனர். தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சினிமா சில காலம் இயக்குனர்கள் கைக்குமாறியது.

தற்போது தமிழ் சினிமா தயாரிப்பை தீர்மானிப்பவர்களாக நடிகர்கள் உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நஷ்டமடைந்து வருகின்றனர். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நடிகர் நடிகைகளின் சம்பளம் குறையாமல் கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலை மாற வேண்டும் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குள் பொறுப்புக்கு வந்தால் இது நடக்காது.

எனவே விஷால் மட்டும் அல்ல நடிகர்கள் யார் போட்டி போட்டாலும் அவர்களை தோற்கடிப்பது என்ற ஒற்றுமை உணர்வு தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது