‘90 எம்.எல்’ சமுதாய சீர்கேடா..? சமநிலை தத்துவமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எவ்வளவுக்கெவ்வளவு தனது இயல்பான குணத்தால் மக்கள் மனதில் ஓவியா இடம்பிடித்தாரோ, அந்த பெயரை எல்லாம் இப்போது 90 எம்.எல் என்கிற ஒரே படத்தில் டேமேஜ் பண்ணி விட்டார் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. அவர் ஒரு நடிகை தானே, இயக்குனர் சொன்ன காட்சியில் நடித்துவிட்டு போகிறார் என்று வைத்துக் கொண்டாலும், இளம்பெண்களுக்கு ஒரு தவறான வழிகாட்டுதலை சொல்லும்படியான கதாபாத்திரத்தில் நடித்ததுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த வருடம் வெளியாகி மிகுந்த கண்டனத்துக்கு ஆளான ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் எப்படி டபுள் மீனிங்கில் உருவாகி முகம் சுளிக்க வைத்ததோ, அதே போல இந்த படம் அதுவும் ஒரு பெண் இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகி, பெண்களுக்கு நடக்கும் அடல்ட் விஷயங்களைப் பற்றி பகிரங்கமாகவே அலசுகிறது.

இந்த படம் நிச்சயமாக இளைஞர்களை கவரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு பெண் இயக்குனரே இப்படி பெண்களை கேவலப்படுத்தும் விதமாக படம் எடுக்கலாமா என கூக்குரல் இட்டு வருகிறார்கள்.. அதேசமயம் ஆண்களுக்காக அதேபோன்று அடல்ட் படம் எடுக்கும்போது, பெண்கள் எப்படி இயல்பாக இருப்பார்கள் என்பதை சொல்வதற்காக ஒரு அடல்ட் படம் எடுப்பது என்ன தவறு.. ஆண்கள் செய்தால் சரி.. பெண்கள் செய்தால் தவறா என தனது வாதத்தை முன்வைக்கிறார் அந்த பெண் இயக்குனர், ஒரு வகையிலும் அதுவும் நியாயமாகத்தான் இருக்கிறது.. படம் வரட்டும் பார்க்கலாம்.