மன்ற பொறுப்பாளர் கைது ; அரசியலுக்குள் இழுக்கப்படுகிறார் கமல்..?


நமது அரசியல்வாதிகளை பொறுத்தவரை அவர்களையும் அவர்களது ஆட்சியையும் இயக்க்கத்ததையும் இயக்க தலைவரையும் குறை கூறாமல் கடந்து செல்லும் சினிமாகாரர்களை சலாம் போடாத குறையாக வரவேற்பார்கள்.. அதேசமயம் தங்களுக்கு எதிராக ஒரு நடிகர் பேச ஆரம்பிக்கிறார் என்று தெரிந்தால் வரிந்துகட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்..

1996 தேர்தலுக்கு முன் ஜெயலலிதா பற்றி ஜினி கூறிய கருத்தால் அவர்மீது எந்த அளவுக்கு அதிமுகவினர் அர்ச்சனை செய்தார்கள் என்பது நாடறிந்த வரலாறு.. ஆனால் அதற்காக ரஜினி உடனே அரசியலுக்கு வந்துவிடவும் இல்லை.. அவரை தொடர்ந்து அதிமுக திமுக இரண்டையும் விமர்சித்தார். எதிர்ப்பு வலுக்கவே, அரசியலில் குதித்த கேப்டன் விஜயகாந்த் இப்போது வரை ஆளுங்கட்சியின் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படுகிறார்.. அவர் மீஎது தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்குகள் பல.

இவர்கள் இருவர் போல தீவிர அரசியல் கருத்துக்கள் எதுவும் கூறாமல் ஒதுங்கி இருந்தார் கமல்.. ஆனால் காலம் அவரையும் அரசியலுக்கு இழுத்து வந்துவிடும் என்றே தெரிகிறது.. தொடர்ந்த ஆளுங்கட்சிய பற்றி கமல் காட்டமாக தனது கருத்துக்களை பதிவு செய்தஊகிறார்.

இதனால் எரிச்சலான ஆளும் தரப்பு கமல் மீது கோபத்தை திருப்பியுள்ளது. அதன் ஒருகட்டமாகத்தான் கமலின் மன்ற பொறுப்பாளர் ஒருவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.. வேண்டாம் என ஒதுங்கிப்போனாலும் வீணாக எங்களை குறிவைக்க வேண்டாம் என கமல் இதற்கும் தனது எதிர்ப்பை தெரியப்படுத்தியுள்ளார்..