சந்தானம் படத்துக்கு பின்னாடி சிக்கல் வருமா..?


அலைந்து திரிந்து தமிழ் அகராதிகளை எல்லாம் அலசி தமிழ்ப்பெயர்தான் என முடிவு செய்து ‘கெத்து’ என பெயர் வைத்தால், இல்லையில்லை.. இது தமிழ் வார்த்தை இல்லை என ஓர் வரியில் சொல்லி, கிடைக்கவேண்ட வேண்டிய வரிவிலக்குக்கு வெட்டும் வச்சுட்டாங்க.. இப்போ அவர் கோர்ட்டுக்கு போகப்போறாரு.. அது தனிக்கதை..

ஆனா அடுத்த படத்துக்கு டக்குனு ரஜினியோட ‘மனிதன்’ பட டைட்டிலை வச்சிட்டாரு.. இதை ஒன்னும் பண்ண முடியாதுல்ல.. இப்ப சந்தானம் தான் நடிக்கிற புது படத்துக்கு நாகேஷோட ஹிட் படமான ‘சர்வர் சுந்தர்’ பட டைட்டிலை எடுத்து வச்சு பூஜையும் போட்டுட்டாரு.

ஆனா இந்தப்படம் வரிவிலக்குக்கு போகும்போது எந்த ஆட்சேபனையும் இல்லாம வரிவிலக்கு கிடைச்சிடும்.. ஏன்னா இது நாகேஷ் பட டைட்டிலாச்சே.. ஆனால் இதுல இருக்குற ‘சர்வர்’ங்கிற வார்த்தை ஆங்கிலமா லத்தீனான்னு தெரியாது.. ஆனா நிச்சயமா தமிழ் இல்ல.. இதுக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கத்தானே போறோம்..?